விராலிமலை ஒன்றியம் மாத்துார் ரிங் ரோடு அருகே ராசிபுரம் சாலையில் வாலிபர் ஒருவர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், மாத்துாரை சேர்ந்த அஜித்குமார் (எ) பாலகிருஷ்ணன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து இலுப்பூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.