15 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை: அன்னவாசல் அருகே பரபரப்பு!

85பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அந்த கிராமத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் பத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு.
கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம்.
குழந்தைகள் உட்கொண்ட குடிநீரின் காரணமாக மஞ்சகாமாலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறப்படும் நிலையில் இது குறித்து உடனடியாக உரிய ஆய்வு மேற்கொண்டு நோய் தொற்றை தடுக்கவும் உரிய பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நித்தீஸ்வரன் என்ற 7 வயது சிறுவன் கடந்த ஜூன் 8-ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்ததாகவும் ஆனால் அதன் பின்பும் கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்நிலையில் தான் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அலட்சியமாக கூறுவதாகவும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு தங்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கவும் இனிமேல் இது போன்ற ஒரு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you