புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா வேளாண்மை கல்லூரியில் இன்று நெல் நடவு திருவிழா நடைபெற்றது.
விழாவில், முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ பங்கேற்றார். அப்போது வேளாண் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெல் நாற்றுகளை வழங்கினர். பின்னர் பயிரிடப்படும் நெல் வகையை குறித்தும், அதன் ஆயுட்காலம் பயிரிடும் முறை குறித்தும் விளக்கப்பட்டது.