திருமயம் தாலுக்கா அகவயில் கிராமம் பூவையல் தெருவை சேர்ந்த ரமேஷ் விவசாயி. நேற்று முன்தினம் (டிசம்பர் 29) இரவு இவரது வயலில் பம்பு செட் மோட்டாரில் காப்பர் வயர் குழாய்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். நேற்று (டிசம்பர் 30) ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கே. புதுப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதுபோல் அடிக்கடி விவசாயிகளின் மின்மோட்டாரில் உள்ள வயர்கள் திருடப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.