புதுக்கோட்டை மாவட்ட அன்னவாசல் அருகே வயலோகம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25 தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினதோரும் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று ஒன்பதாம் நாள் நாள் திருவிழாவான தேரோட்டம் அதி விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக மா பலா வாழை உள்ளிட்ட முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வைத்து வயலோகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என்று முழக்கமிட்டமாறு தேரை வடம் பிடித்து நான்கு வீதி வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. அம்மனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.