புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த 39 வயது கண்ணன் டிப்பர் லாரி டிரைவர் இவர்
வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார் அன்னவாசல் பிரிவு சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் பலத்த காயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் தேவகோட்டை சேர்ந்த சையது அபுதாஹீரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.