இலுப்பூர்: அன்னவாசல்
உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்தவர் நவீன்ராஜ்(23), சம்பவத் தன்று இரவு பையூரில் நடந்த கலை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது துாங்கி விட்டார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான செல்போன் திருடப்பட்டது. மறுநாள் காலை சாங்கிராப்பட்டியை சேர்ந்த பழனியப்பன் (21), ராப்பூசலை சேர்ந்த சிவா(21) ஆகியோர் நவீன்ராஜிடம் போனில் தொடர்புகொண்டு உனது செல்போன் எங்களிடம்தான் உள்ளது. அது வேண்டும் என்றால் ரூ. 10 ஆயிரம் தரவேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து நவீன்ராஜ் இலுப்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பழனியப்பன், சிவா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.