சர்ச்சில் தகராறு செய்த மேலும் ஒருவர் கைது

73பார்த்தது
விராலிமலை ஒன்றியம் தெற்கு மலம்பட்டியில் உள்ள சர்ச்சில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த கிறிஸ்மஸ் விழாவின்போது, மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி பாஜ பிரமுகர் உட்பட 4 பேர் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சர்ச் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4வது நபரான பாக்குடியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி