வேன்மோதிய விபத்தில் இளம்பெண் பலி!

62பார்த்தது
அறந்தாங்கி பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி கீர்த்திகா (31). நேற்று மதியம் பொருட்கள் வாங்குவதற்காக கீர்த்திகா ஸ்கூட்டியில் அறந்தாங்கி தாலுகா அலுவலக சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த வேன் ஸ்கூட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கீர்த்திகா அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த சந்தோஷ் (21) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி