புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த வெள்ளஞ்சர் காலனியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவர் வெள்ளஞ்சர் காலனி கிளை சாலையில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாலையில் மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் அன்னவாசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.