புதுகை, விராலிமலை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா (18). இவர் பைக்கில் தனது வீட்டிலிருந்து லஞ்சமேட்டிற்கு, சென்று சென்றுள்ளார். அப்போது, தனிக்குளம் கார்னர் அகரபட்டி சாலையில் அவருக்கு எதிரே ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்த பழனியப்பன் (32) மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.