பொன்னமராவதி: இளம் பெண் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் சற்குணம் (32). இவர் மனைவி பிரியங்கா(19). இவர்கள் திருமணம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பிரியங்கா சுந்தர சோழபுரத்தில் உள்ள அவர் அம்மாச்சி வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார். பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இலுப்பூர் ஆர்டிஓ அக்பர்அலி 'தனியே விசாரணை செய்து வருகிறார்.