திருமயம் அருகே உள்ள அடுகப்பட்டியை சேர்ந்தவர் கலையரசி (30). இவருக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகன் உள்ளார். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று மாலை அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி குடும்ப பிரச்னையா, அல்லது உடல்நலக் கோளாறா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.