புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி கேசராப்பட்டி கிளை அஞ்சலகத்தில் 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நிரந்தர வைப்பு திட்டம், தொடர் வைப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்றவற்றில் சேமித்து வைத்திருந்த பணத்தை அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் கருகப்பூலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கையாடல் செய்ததை தெரிந்த பொதுமக்கள் தபால் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.