மாவட்ட செயலாளர் ராஜசேகருக்கு தொண்டர்கள் புத்தாண்டு வாழ்த்து!

83பார்த்தது
மாவட்ட செயலாளர் ராஜசேகருக்கு தொண்டர்கள் புத்தாண்டு வாழ்த்து!
ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் தற்பொழுது கொண்டாடப்படும் நிலையில் இந்த புத்தாண்டை இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அதிமுக ஓபிஎஸ் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராஜசேகரனை அதிமுக ஓபிஎஸ் அணியின் தொண்டர்கள் நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு தெரிவித்தனர். வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்தார். முன்னதாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அவரை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி