வார்ப்பட்டு கோயில் கும்பாபிஷேக விழா!

71பார்த்தது
வார்ப்பட்டு கோயில் கும்பாபிஷேக விழா!
பொன்னமராவதி அருகே
உள்ள வார்ப்பட்டு அழகியநாச்சியம்மன் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, லட்சுமி பூஜை, பூர்ணாஹுதி மற்றும் யாகசாலை பூஜைகள் நடந் தன. 3ம் கால யாக பூஜை நிறைவடைந்ததும் முரளி பட்டாச்சாரியார் தலைமையில் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. இதில் வார்ப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர் கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விஸ்வ கர்மா மூன்று கரை பங்காளிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி