புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமணசமுத்திரத்தை சேர்ந்த சுமதி நேற்று மாலை 4 மணி அளவில், தனது 3 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் புதுகைக்கு சென்றுள்ளார். ஸ்ரீராம் நகர் சாலையில் வரும்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில், இருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், நமணசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.