திருமயத்தில் இருந்து விராச்சிலை செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இன்று திருமயத்தில் இருந்து விராச்சிலை சென்ற டிப்பர் லாரி திடீரென நிலை தடுமாறி பள்ளத்தில் உருண்டது. இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் லாரி டிரைவரை மீட்டனர். இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதனால் சில நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.