புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பிரசித்தி பெற்ற சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று காலை 5: 30 மணிக்கு நம்பெருமாள் சத்தியமூர்த்தி, ராஜா அலங்காரத்தில் அடியார்கள் புடை சூழ சொர்க்கவாசல் வழியே மேல தாளங்கள் முழங்க வெளியே வந்தார். அப்பொழுது பக்தர்களின் கோவிந்தா!! கோவிந்தா!! கோஷம் விண்ணை பிளந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.