ஆபத்தான மின்மாற்றியை அப்புறப்படுத்த கோரிக்கை!

83பார்த்தது
ஆபத்தான மின்மாற்றியை அப்புறப்படுத்த கோரிக்கை!
ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை
செல்லும் மணிப்பள்ளம் சாலையில் அரசடிப்பட்டி நால்ரோடு அருகே சாலையோரம் உள்ள மின்மாற் றியின் அடிப்பகுதியில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆடிமாதம் காரணமாக இப் போது பலத்த காற்று வீசி வரும் நிலையில், மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்மாற்றியை அப்புறப்படுத்திவிட்டு புதிய மின் மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி