புதுக்கோட்டை மாநகர் சிவபுரத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பெருமக்கள் பள்ளி நிர்வாகிகள் இணைந்து கிறிஸ்மஸ் விழாவினை பெரு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அரையாண்டு விடுமுறை வர இருப்பதால் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முன்னதாகவே இந்த விழாவினை சிறப்பாக மாணவ மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். விழா முடிந்து எல்லா மாணவ மாணவிகளுக்கும் கிறிஸ்மஸ் தாத்தா இனிப்புகள் வழங்கினார்.