புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்று காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு நல்ல மழை பெய்தது. இதனால் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் கன மழை பெய்து இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிறைய வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.