புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே
உள்ள எம். உசிலம்பட்டி ஊராட்சி சூரப்பட்டி, வடக் கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சூரப்பட்டி மற்றும் வடக்கிபட்டி பொதுமக்கள் பொன்னமராவதி அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: எம். உசிலம்பட்டி ஊராட்சி சூரப்பட்டி, வடக்கிபட்டி மற்றும் சுற்றியுள்ள கீழக்குறிச்சிபட்டி, ஊனையூர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் பேர் வசிக்கின் றனர். ஆனால் இப்பகுதியில் போதிய பஸ் வசதி யின்றி அவதிக்குள்ளாகி வருகிறோம். தினமும் 3 முறை மட்டுமே பஸ் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொன்னமராவதியிலிருந்து மேலத்தானியம், பாலகுறிச்சி வழித்தடத்தில் இயக் கப்படும் நகர பஸ்களை சூரப்பட்டி வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.