பொன்னமராவதி அருகே சங்கம்பட்டியில் நேற்று இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் மாடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். அந்த வழக்கில் திடீர் திருப்பமாக, மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் தந்தையே பெற்ற மகனை அடித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 9) போலீசார் இளைஞரின் தந்தையை கைது செய்தனர்.