புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. முன்னதாக நான்கு கால யாக வேள்விகள் நடைபெற்று, கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.