பொன்னமராவதி பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த பேரில் தகவலின் தனிப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நகரப்பட்டி டாஸ்மாக் மதுபான கடை அருகே கஞ்சா பொட்டலத்துடன் நின்ற சிவகங்கை மாவட் டம் குளத்துப் பட்டி மேட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன்(21), புதுக்கோட்டை ஈச்சம் பட்டி ஆகாஷ்(19), அருண்பாண்டி(21) அவர்கள் அளித்த தகவலின் பேரில் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த குமார்(43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து 390 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.