பொன்னமராவதி: போதை விற்ற 2 கடைக்கு சீல்!

53பார்த்தது
பொன்னமராவதி நகரில் தமிழக
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மா, தனிப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மளிகை கடை, பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற் பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பிரவீன்குமார் தலைமையிலான அலுவலர்கள் 2 கடைக்கும் சீல் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி