திருமயம் அருகே உள்ள பனங்குடியை சேர்ந்த குமார் (40). இவர் இருசக்கர வாகனத்தில் திருமயத்தில் இருந்து பனங்குடிக்கு சென்றபோது கிராம சாலையின் குறுக்கே பன்றி வந்ததால் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினர்.