புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டூரைச் சேர்ந்த மகேந்திரன் (46) என்பவர் நமணசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த பாரதி (40) மோதியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரில் நமண சமுத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.