புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நல்லூர் இரட்டை விநாயகர் கோவிலில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் நல்லூர் அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை வழிபாடாக நடைபெற்றது. இரட்டை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருவிளக்கு பூஜை தொடங்கியது. உலக நன்மை வேண்டியும், திருமாங்கல்யம் நிலைக்க வேண்டியும் பெண்கள் குத்து விளக்கு ஏற்றினர்.