பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி தபால் நிலையத்தில் பொதுமக்களிடம் பல லட்சம் கையாடல் செய்த அஞ்சலக அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர கோரி வலையபட்டி தபால் நிலையம் முன்பு இன்று காலை 11 மணியிலிருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொதுமக்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலும் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.