புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த துளையானூரரை சேர்ந்தவர் பழனியப்பன் (72). இவருக்கு திருமணமாகி 40 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென்று மது போதையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக துளையானூரில் உள்ள ஆலமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது சகோதரர் அளித்த புகாரில் திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.