திருமயத்தில் சாரல் மழை!

69பார்த்தது
புதுக்கோட்டை, திருமயத்தில் கடந்த இரண்டு நாட்களாக காலையில் வெயிலும் மாலையில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய சாரல் மழையினால் இப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் இந்த சாரல் மலையானது கன மழையாக பெய்து இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிறைய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி