திருமயத்தில் நேற்று காலையிலிருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு கன மழை கொட்டி தீர்த்ததால் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சுழல் நிலவி வருகிறது. திடீரென்று பெய்த இந்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர் கனமழையாக பெய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.