திருமயம் கோட்டை வாசலில் உள்ள கனரா வங்கியில் மின் கசிவு காரணமாக இன்வெர்ட்டர் எரிந்து தீ விபத்தானது.
உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் மின் இணைப்பை துண்டித்து பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதை தடுத்தனர். இதனால் 200 கோடி ரூபாய் நகை மற்றும் பல கோடி ரூபாய் ரொக்க பணம் தப்பியதாக கிளை உதவி மேலாளர் தகவல் இதனால் திருமயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.