இலக்கிய போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

60பார்த்தது
இலக்கிய போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
பொன்னமராவதி புதுக்கோட்டையில் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இலக்கியப் போட்டிகளில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
விழாவையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை உள்ளிட்ட இலக்கியப் போட்டிகள் புதுக்கோட்டை ராணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பேச்சுப் போட்டியில், பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவி
மாணவி ச. செம்மொழி முதலிடம் பிடித்து, ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றார். கட்டுரைப் போட்டியில் இப்பள்ளி மாணவி மு. மதுமிதா இரண்டாம் இடம் பெற்று ரூ. 7 ஆயிரம் ரொக்கப் பரிசை பெற்றுள்ளார்.
இதனால், இந்த மாணவிகள் மாநிலப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பள்ளி முதல்வர் ச. ம. மரியபுஷ்பம் மாணவிகளை கௌரவித்து பாராட்டினார். துணை முதல்வர் ஆர். பிரின்ஸ், ஆசிரியர் செ. பாலமுரளி, தமிழாசிரியர்கள் வ. கலைச்செல்வி, கு. சத்யா ஆகியோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி