திருமயம் அருகே உள்ள வாரியப்பட்டி அடைக்கல மாதா ஆலயத்தில் செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது. தேர்திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருட திருவிழாவிற்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை தேவாலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.