கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்!

51பார்த்தது
கே. புதுப்பட்டியில் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. சாலையில் துள்ளிக் குதித்து சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர். இந்தப்போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டி பெரிய மாடு, சிறியமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 7ஜோடி மாட்டு வண்டிகளும் நசிறிய மாடு பிரிவில் 17ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடு போகவர 9 மைல் தூரமும்‌ நடுமாடு மற்றும் சிறிய மாட்டிற்கு போகவர 6 மைல் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது.
இறுதியில் வெற்றி பெற்ற பெரிய மாடு, நடுமாடு மற்றும் சிறிய மாடு பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் வெற்றிக்கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த பந்தயத்தை காண சாலையில் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சாலையில் துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்த மாட்டுவண்டி ஜோடிகள் ஒன்றையொன்று முந்திச் சென்றபோது போட்டியை கிராம தலைவர் கணபதி அம்பலம் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி