புதுகை அரிமளம் சாலையில் பிரிட்டிஷ் காலத்து கல்வெட்டினை தமிழ் துறை மற்றும் தொல்லியல் வரலாற்று பேராசிரியர் காளிதாஸ் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதில் "ஒற்றை புலி குடியிருப்பு 2 பர்லாங்" என்று எழுதப்பட்டுள்ளது. 1680 முதல் 1948 ஆண்டுக்குள் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டாலும் தமிழில் எழுத்துக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.