புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், இரத்ததான விழிப்புணர்வு மற்றும் இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மௌண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவ கல்லூரி முதலவர் ராஜ்மோகன் மௌண்ட் சீயோன் கல்லூரியின் இயக்குனர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.