புதுகையைச் சேர்ந்த சீனிவாசன் (43) தனது ஹோண்டா வெர்னா காரில் ஜன. 08. மாலை 7 மணிக்கு குழி பிறையில் இருந்து புதுகைக்கு வந்து கொண்டிருந்தார்.
நற்சாந்துபட்டி சேர்ந்த ராஜேஷ் (22) ஓட்டி வந்த பைக் காரின் மீது மோதியதில் ராஜேஷ் காயமடைந்து புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கார் டிரைவர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் நமணசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.