புதிய நகரில் மனை அமைப்பதற்கான பூமி பூஜை!

67பார்த்தது
புதிய நகரில் மனை அமைப்பதற்கான பூமி பூஜை!
பொன்னமராவதியில் நற்பொறியாளர் விருது பெற்ற நிறுவனத்தின் புதிய‌ நகருக்கான பூமி பூஜை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் VNR கண்ஸ்ட்ரக்சன் என்ற கட்டுமான நிறுவனம் பொறியாளர் வி. நாகராஜன் தலைமையில் இயங்கி வருகிறது. நற்பொறியாளர் விருது பெற்ற இந்த நிறுவனம் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு நகரங்களை உருவாக்கி வீடுகள் கட்டிக் கொடுத்து விற்பனை செய்து வருகிறது. தற்பொழுது புதிதாக பொன்னமராவதியில் விஐபி நகர்களில் ஒன்றான முத்தமிழ் நகருக்கு அருகே சாய்ராம் நகரில் புதிய நகரில் மனை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சாய் ராம் நகர் நிறுவனர் லட்சுமணன் செட்டியார் தலைமை வகித்தார். தொட்டியம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதா சோலையப்பன் மமுன்னிலை வகித்தார் டைல்ஸ் மேனேஜஜிங் டைரக்டர் செந்தில்குமார் வாஸ்து பூமி பூஜை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கட்டுமான நிறுவன ஊழியர்கள், வங்கி மேலாளர்கள், பொன்னமராவதி பொறியாளர் சங்க தலைவர் ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி