திருமயம் அருகே உள்ள நைனாபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (28). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ராதா (27). சம்பவத்தன்று கணவர் வேலைக்குச் சென்ற நிலையில் ராதா வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராதாவைத் தாக்கிவிட்டு வீட்டு அலமாரியை உடைத்து சங்கிலி, மோதிரம், தோடு, வளையல் என்று சுமார் 20 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ. 10 லட்சமாகும். அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் வந்து ராதாவை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும் டிஎஸ்பி அப்துல் ரஹ்மான், இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், யோகராசு ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.