புதுக்கோட்டை மாவட்டம், சவேரியார்புரம் அருகே லேணாவிளக்கில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து சென்றுள்ளது. அப்போது திருச்சிக்கு சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரி தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தனியார் கல்லூரி வாகனத்தில் பயணித்த 11 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த அனைவரும் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.