கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு…

1775பார்த்தது
கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு…
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே நார்த்தாமலை வன பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் புள்ளிமான் நீரை தேடி தொடையூர் வயல்பகுதிக்குள் வந்துள்ளது. அப்போது நாய் ஒன்று மானை துரத்தி உள்ளது. அதில் அந்த புள்ளிமான் தரமட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில், நிலைய அலுவலர் சரவணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி புள்ளி மானை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அந்த மானை நார்த்தாமலை வனப்பகுதி அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி