புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(36) கணேசன் மதுவுக்கு அடிமையான நிலையில் அடிக்கடி குடும்பத்துடன் சண்டையிட்டு வந்துள்ள நிலையில், நேற்று இரவு குடித்துவிட்டு மதுபோதையில் மொட்டை மாடியில் தூங்க சென்றுள்ளார். காலை வெகு நேரமாகியும் கீழே வராததால் அவரது மகன் மொட்டைமாடிக்கு சென்ற பொழுது அங்கு கணேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.