பொன்னமராவதி அருகே மேலமேலநிலை கிராமத்தில் உள்ள அமுக்குணி கண்மாயில் கோடைக்காலத்தை முன்னிட்டும், நன்றாக மழை பெய்து விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடித் திருவிழா நடந்தது. கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, சிலேபி, அயிரை, கெண்டை, விரால் ஆகியவை கிடைத்தன. துதூரி என்ற மீன்பிடி உபகரணத்தை கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர். மீன்களை மகிழ்ச்சியுடன் கிராமமக்கள் தங்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.