புதுக்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் சீண்டல் கொடுத்ததாக 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு
கலீப் நகரை சேர்ந்த
முகமது பைசல் (25) என்ற இளைஞர் சமூக வலைத்தளங்கள் மூலம் பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் சீண்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில்
அனைத்து மகளிர் நிலைய போலீசார் இளைஞர் முகமது பைசலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.