புதுக்கோட்டை எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சட்ட பணிகுழு ஆணையம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரன் மற்றும் நீதிபதிகள் பால்பாண்டி, ராஜேந்திர கண்ணன் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். விதைக்கலாம் அறக்கட்டளை சார்பில் பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.