புதுக்கோட்டையில் உள்ள KKC மகளிர் கல்லூரியில் தை திருநாள் பொங்கல் பண்டிகை ஒட்டி மாணவிகள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது. 13 துறைகளைச் சேர்ந்த அனைத்து மாணவிகள் பங்கேற்று 13 பானைகளில் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். கல்லூரி பேராசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.